இந்தியாவில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், செட்வொர்க் மேனுஃபேக்சரிங் பிசினஸ், அவாடா எலக்ட்ரோ உள்ளிட்ட 12 நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் பொதுமக்களுக்கு பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரை இந்திய நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலம் ரூ.1.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளன.அக்டோபரில் பங்குகளை வெளியிடத் திட்டமிட்டுள்ள மற்ற நிறுவனங்களில் ஃப்யூஷன் சிஎக்ஸ், எச்டி ஃபயர் புரொடெக்ட், டோன்போ இமேஜிங், போன்ஃபிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ், சஹஜானந்த் மெடிக்கல் டெக்னாலஜீஸ், பாரஸ் ஹெல்த்கேர், என்டிஆர் இன்விட் டிரஸ்ட், குஜராத் விக்டரி ஃபோர்ஜிங்ஸ் மற்றும் எஸ்எஃப்சி என்விரான்மென்டல் டெக்னாலஜீஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்களைப் பங்கு வெளியீடுகளைக் கையாளும் வணிக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு அக்டோபர் 21 முதல் 23 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், மருத்துவம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. நிறுவனங்கள் புதிதாகப் பங்குகளை வெளியிடுவதுடன், ஏற்கெனவே தங்களிடம் உள்ள பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளன.
புதிதாகப் பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை, தொழிலை விரிவுபடுத்தவும், புதிய உற்பத்தி வசதிகளை ஏற்படுத்தவும், கடனைத் திருப்பிச் செலுத்தவும், அன்றாடத் தொழில் செலவுகளைச் சமாளிக்கவும் நிறுவனங்கள் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.